புஷ்கரிணி அல்லது கோவில் தீர்த்தம் என்றால் தமிழில் "கோயில் குளம்" என்று பொருள்; இந்த குளம் அல்லது புஷ்கரிணியில் நடந்த பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் கோவிலை இன்னும் சிறப்பிக்கின்றன. "புஷ்கரணி" அல்லது "தீர்த்தம்" என்பது கோவிலின் வளாகத்திற்குள் (கிட்டத்தட்ட) உள்ள புனிதமான ஆன்மீக தீர்த்தமாகும். இந்த தீர்த்தங்கள் "குண்ட்", "சரோவர்" என்றும் குறிப்பிடப்படுகின்றன. சில கோவில்களில் ஒரே ஒரு புஷ்கரணி மட்டுமே உள்ளது. ஆனால் சில கோவில்களில் ஒன்றுக்கு மேற்பட்டவை உள்ளன; தீர்த்தவாரி மற்றும் தெப்ப உற்சவம் ஆகியவை இந்து கோவில்களின் சிறப்பு ஈர்ப்பாகும், இந்த தீர்த்தத்தில் உத்ஸவர் தாயார் உடன் வருவார், இதன் மூலம் அவர்கள் பக்தர்கள் அனைவருக்கும் தெய்வீக தரிசனம் அளிக்கிறார்கள்;

எ.கா: பொய்கை ஆழ்வார் அவதாரம் திருவெஃகா திவ்ய தேசத்தின் குளத்தின் அருகே நடந்தது. அதே போல பல புஷ்கரினிகளில் நிகழ்த்தப்படும் பிரதான உற்சவங்களில் ஒன்றான தெப்ப உற்சவம்; இந்த கோவில் தீர்த்தங்கள் அல்லது குளங்கள் அல்லது புஷ்கரிணிகள் அல்லது புஷ்கரிணி பல்வேறு நோய்களை குணமாக்கும், பல்வேறு சாபங்களிலிருந்து நம்மை விடுவிப்பதோடு நமக்கு வரங்களையும் தருகிறது; மேலும், இந்த தீர்த்தங்கள் உள்ளூர் மக்களுக்கு நீர் ஆதாரமாகவும் உள்ளன; மேலும் சுற்றுப்புறத்தை ஈரமாகவும் குளிராகவும் வைத்திருக்கிறது.

பல்வேறு இந்து கோவில்களில் பிரபலமான மற்றும் பெரிய கோவில் தீர்த்தங்கள் உள்ளன; இந்தப் புதிய பகுதியில், கோயில்கள் முழுவதும் உள்ள மிகப் பெரிய மற்றும் புகழ்பெற்ற கோவில் தீர்த்தங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்;

இதன் முக்கிய நோக்கம் அடுத்த முறை நீங்கள் அந்தந்த கோவிலுக்கு போகும் பொழுது மறக்காமல் இந்த தீர்த்தங்களை உங்கள் தலையில் தெளித்துக்கொளுங்கள். அப்படி செய்வதன் மூலம் உங்களின் பல்வேறு பாவங்கள் விலகும்.


ஜடாயு புஷ்கரிணி, அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி
க்ஷீர புஷ்கரணி, திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்

க்ஷீர புஷ்கரணி, திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்
க்ஷீர புஷ்கரணி, திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்

அனந்த சரஸ் - கோவில் குளம், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்
அனந்த சரஸ் - கோவில் குளம், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்

கைரவினி புஷ்கரிணி, அருள்மிகு ஶ்ரீ பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில்
கைரவினி புஷ்கரிணி, அருள்மிகு ஶ்ரீ பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில்